விக்ரம் - அஜய் ஞானமுத்து இணையும் 'விக்ரம் 58' பட டைட்டில் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 25, 2019 06:08 PM
'கடாரம் கொண்டான்' படத்துக்கு பிறகு விக்ரம், 'இமைக்கா நொடிகள்' பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விக்ரமின் 58வது படமான இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

7 ஸ்கீரின் ஸ்டுடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக KGF பட நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். சிவகுமார் விஜயன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படத்துக்கு கோப்ரா என்று பெயரிடப்பட்டுள்ளது தெரியவருகிறது.
விக்ரம் - அஜய் ஞானமுத்து இணையும் 'விக்ரம் 58' பட டைட்டில் என்ன தெரியுமா? வீடியோ
Tags : Vikram, Ajay Gnanamuthu, AR Rahman