தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் 'தளபதி 63' படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கிறார். மேலும் ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஏ. ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த படம் குறித்து தற்போது சில செய்திகள் வெளியானது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி விஜய்யின் 64 வது படத்தை 'மாநகரம்' பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறாராம்.
லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து 'கைதி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரி்தது வருகிறது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.