விஜய் தேவரகொண்டாவின் World Famous Lover பட ரொமான்டிக் டீஸர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 03, 2020 05:23 PM
'டியர் காம்ரேட்' படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் 'வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்'. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கண்ணா, கேத்ரீன் தெரஸா, இஸபெல்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஜெயகிருஷ்ணா கும்மடி ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். வெங்கடேஸ்வரா ராவ் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த படத்தை கிரந்தி மாதவ் எழுதி, இயக்கியுள்ளார்.
இந்த படத்தை கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் சார்பாக கே.ஏ.வல்லபா தயாரித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டீஸரில் விஜய் தேவரகொண்டா நான்கு வித கெட்டப்களில் வருகிறார்.
விஜய் தேவரகொண்டாவின் WORLD FAMOUS LOVER பட ரொமான்டிக் டீஸர் இதோ வீடியோ