www.garudabazaar.com

பிகில் பட தயாரிப்பாளர் வெளியிட்ட அதிரடி ஸ்டேட்மென்ட்.. பின்னணியில் அஜித் பட தகவல் காரணமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிரடி பதில் கொடுத்துள்ளார். 

அர்ச்சனா கல்பாத்தி பதிவு | vijay's bigil producer opens on her next movie

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் கம்பனி ஏ.ஜி.எஸ். இவர்கள் கடந்த ஆண்டு, விஜய், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் பிகில் திரைப்படத்தை தயாரித்தனர். இத்திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, பாக்ஸ் ஆபீஸிலும் சூப்பர் ஹிட் அடித்தது. 

அர்ச்சனா கல்பாத்தி பதிவு | vijay's bigil producer opens on her next movie

இந்நிலையில் தற்போது ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் கிரியேட்டிவ் ப்ரொட்யூசரான அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''இந்த 2020-ல் நாங்கள் எந்த படத்துக்கும் ஒப்பந்தம் போடவில்லை. சில தவறான தகவல்கள் வலம் வருவதை பார்க்கிறோம். அதனால், ஏ.ஜி.எஸ் சார்பாக இந்த விளக்கத்தை கொடுக்கிறோம். இன்னும் யாரையும் சந்திக்கவில்லை. எந்த விவாதமும் நடக்கவில்லை'' என அவர் திட்டவட்டமாக பதிவிட்டுள்ளார். 

ஏ.ஜி.எஸ் நிறுவனம் அடுத்ததாக, அஜித் நடிக்கும் படத்தை தயாரிப்பதாகவும், இத்திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாகவும் அண்மையில் ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் வலம் வந்தது. இதுகுறித்து விளக்கமாகதான் இவரின் பதிவு இருப்பதாக கூறிகின்றனர் நெட்டிசன்ஸ். 

 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

அர்ச்சனா கல்பாத்தி பதிவு | vijay's bigil producer opens on her next movie

People looking for online information on AGS Entertainment, Ajith Kumar, Archana kalpathi, Vijay will find this news story useful.