www.garudabazaar.com

வடிவேல் பாலாஜி மறைவால்., மணிமேகலை எமோஷனல்.. ''கடைசி வரைக்கும் அந்த வீடியோவை எடுக்கவே முடியல.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியுடனான நினைவுகள் குறித்து ஆங்கர் மணிமேகலை எமோஷனலாக பேசியுள்ளார். 

வடிவேல் பாலாஜி பற்றி மணிமேகலை | VJ manimegalai emotional on vadivel balaji sudden demise

சின்னத்திரை காமெடி ஷோக்களில், தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனிடையே, உடல்நிலை கோளாறு காரணமாக, இன்று அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு, பல்வேறு பிரபலங்கள் உருக்கமான இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே வடிவேல் பாலாஜியுடன் ஒன்றாக பணியாற்றியுள்ள விஜே மணிமேகலை, அவருடனான நினைவுகள் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

வடிவேல் பாலாஜி பற்றி மணிமேகலை | VJ manimegalai emotional on vadivel balaji sudden demise

அப்போது அவர் கூறியதாவது, ''அந்த ரியாலிட்டி ஷோவில்தான் எனக்கு அவருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் ஜாலியாக இருக்கும் மணிதர் அவர். எனக்கும் அவருக்கும் ஒரு அண்ணன் தங்கை உறவு இருந்து வந்தது. வடிவேலுவை போலவே, என்னை பார்த்து மணிமேகலை என அழைத்து, பிரபல காமெடியை காட்சியை நினைவுபடுத்துவார். கண்டிப்பாக அந்த காமெடி காட்சியை நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என நினைத்தோம். அது நடக்காமல் போய்விட்டது'' என அவர் தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து விஜே மணிமேகலை பேசிய முழு வீடியோ இதோ., 

வடிவேல் பாலாஜி மறைவால்., மணிமேகலை எமோஷனல்.. ''கடைசி வரைக்கும் அந்த வீடியோவை எடுக்கவே முடியல.." வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

வடிவேல் பாலாஜி பற்றி மணிமேகலை | VJ manimegalai emotional on vadivel balaji sudden demise

People looking for online information on Vadivel Balaji, VJ Manimegalai will find this news story useful.