www.garudabazaar.com

மீண்டும் விஜய் டிவி சீரியலில் களமிறங்கும் ஆல்யா மானஸா - பூஜையுடன் அதிரடி துவக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரின் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானஸா - சஞ்சீவ் கார்த்திக் ஜோடி. இந்த நிகழ்ச்சியின் போது இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

Actress Alya Manasa shares Pooja pics from her new Vijay TV serial | தனது புதிய விஜய் டிவி சீரியலின் புகைப்படத்தை பகிர்ந்த ஆல்யா மானஸா

இவர்களுக்கு சமீபத்தில் அய்லா என்ற பெண் குழந்தையுள்ளது. சஞ்சீவ் கார்த்திக் காற்றின் மொழி சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்த நிலையில் ஆல்யா மானஸாவின் அடுத்த சீரியல் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

இந்நிலையில் ராஜா ராணி இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் மீண்டும் விஜய் டிவியில் புதிய சீரியலில் களமிறங்கவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீரியலின் பூஜை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் நடிகை பிரவீனா உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி இந்த சீரியலில் நடிப்பது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எதாவது தவறாக நடந்தால் அதனை கடந்து வாருங்கள். எல்லோமே ஏதோவொரு காரணத்துக்காக நடக்கும். அதில் இருந்து ஏதோ நல்லது நடக்கும்.

உங்கள் நம்பிக்கையை இழக்காதீர்கள். நான் விஜய் டிவியின் புதிய சீரியலில் நடிக்கவிருக்கிறேன். நன்றி, இயக்குநர் பிரவீன் பென்னட் சார்'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகை ஆல்யா மானஸாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pooja for our new serial @vijaytelevision @praveen.bennett @globalvillagers

A post shared by alya_manasa (@alya_manasa) on

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Alya Manasa shares Pooja pics from her new Vijay TV serial | தனது புதிய விஜய் டிவி சீரியலின் புகைப்படத்தை பகிர்ந்த ஆல்யா மானஸா

People looking for online information on Alya Manasa, Vijay tv will find this news story useful.