அட்லி - தளபதி விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, விவேக், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஃபுட் பால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் விஜய் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை யுனைட்டட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனமும், எக்ஸ் ஜென் ஸ்டுடியோ நிறுவனமும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.