www.garudabazaar.com

வைரலாகும் 'குடும்ப' புகைப்படம்... ரொம்ப 'மிஸ்ஸிங்' உருக்கமான மெசேஜ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொதுவாக பண்டிகைகளின் போது பெரிய படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் கொரோனாவால் அனைத்து தியேட்டர்களும் களையிழந்து விட்டன. என்றாலும் கூட தங்கள் குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அந்த வகையில் நடிகர் விஜயகுமார் குடும்பத்தினரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Vijayakumar's family picture goes viral on Social media

தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜயகுமார் மகன், மருமகள், மருமகன், மகள்களுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல். இதில் நடிகைகள் ஸ்ரீதேவி விஜயகுமார், பிரீதா விஜயகுமார், இயக்குநர் ஹரி. மற்றும் நடிகர் அருண் விஜய் அவரது மனைவி மற்றும் அவர்களுடைய குழந்தைகள் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இதைப்பார்த்த விஜயகுமாரின் பேத்தியும் அனிதா விஜயகுமாரின் மகளுமான தியா, புகைப்படத்தை பகிர்ந்து '' இன்னைக்கு எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்றேன்,'' என தெரிவித்து இருக்கிறார். இந்த குடும்ப புகைப்படத்தில் அவர் இடம்பெறவில்லை . இதையொட்டியே அவரது போஸ்டில் மிஸ் பண்ணுவதாக தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

வைரலாகும் 'குடும்ப' புகைப்படம்... ரொம்ப 'மிஸ்ஸிங்' உருக்கமான மெசேஜ்! வீடியோ

Tags : Arun Vijay

Vijayakumar's family picture goes viral on Social media

People looking for online information on Arun Vijay will find this news story useful.