www.garudabazaar.com

VARISU: இசையமைப்பாளர் தமன் பிறந்தநாளில் 'ரஞ்சிதமே' பாடல் படைத்த மாஸ் சாதனை! கொண்டாடும் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Vijay Varisu Ranjithame song crossed 5 crore views

Also Read | வாரிசு படத்தின் 'ரஞ்சிதமே' பாட்டுக்கு டான்ஸ் ஆடிய நடிகை ஹரிஜா.. படு வைரலாகும் வீடியோ!

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

 Vijay Varisu Ranjithame song crossed 5 crore views

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 Vijay Varisu Ranjithame song crossed 5 crore views

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த பாடல் தற்போது 50+ மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

 Vijay Varisu Ranjithame song crossed 5 crore views

இசையமைப்பாளர் தமன் தனது 39 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "நம் மண் மணத்துடன் ஒரு பாடலைத் தர வேண்டும் என்ற முயற்சியைத் தூக்கிப் பிடித்த 5 கோடி பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி !! இசையமைப்பாளர் தமன் அவர்களுக்கு சிறந்த பரிசு. பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ❤️. இந்த முயற்சியை வரவேற்ற தளபதி ரசிகர்களுக்கு அன்பு முத்தங்கள் !!" என விவேக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | BREAKING: வாரிசு படத்தின் நெல்லை & குமரி ஏரியா உரிமம்.. கைப்பற்றிய பிரபல வினியோகஸ்தர்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Ranjithame song crossed 5 crore views

People looking for online information on Thalapathy Vijay, Varisu, Varisu Ranjithame Song, Vijay will find this news story useful.