www.garudabazaar.com

விஜய் நடிக்கும் 'வாரிசு'.. திருச்சி & தஞ்சாவூர் ஏரியா ரிலீஸ் தொடர்பான அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தின் திருச்சி & தஞ்சாவூர் ஏரியா ரிலீஸ் தொடர்பான அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

Vijay Varisu Movie TT Area Rights Bagged by NarayanaSamy

Also Read | "கமலுக்கு 'விக்ரம்'.. ரஜினிக்கு 'தளபதி' மாதிரி.. அப்போ அஜித்துக்கு?".. லோகேஷ் மாஸ் பதில்!

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

'வாரிசு' படத்தை  தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில்  நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர்.

Vijay Varisu Movie TT Area Rights Bagged by NarayanaSamy

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijay Varisu Movie TT Area Rights Bagged by NarayanaSamy

சமீபத்தில் வாரிசு படத்தின் முதல் சிங்கிள் பாடல் "ரஞ்சிதமே"  வெளியாகியுள்ளது.

இந்த பாடலை நடிகர் விஜய் & மானசி பாடியுள்ளனர். ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன் இசையில் பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதி உள்ளார். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வாரிசு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை Phars Films நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் கைப்பற்றி உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Vijay Varisu Movie TT Area Rights Bagged by NarayanaSamy

இந்நிலையில் இந்த படத்தின் திருச்சி தஞ்சாவூர் ஏரியாவை பிரபல வினியோகஸ்தரான க்ரீன் ஸ்கிரீன் நாராயணசாமி கைப்பற்றி உள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாராயணசாமி ஏற்கனவே விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா, தெறி படங்களை வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | PS1: 'பொன்னியின் செல்வன்' படத்தின் 50வது நாள்.. நடிகர் விக்ரம் வெளியிட்ட மொத்த வசூல் விவரம்!

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Varisu Movie TT Area Rights Bagged by NarayanaSamy

People looking for online information on Narayanasamy, Varisu, Vijay, Vijay Varisu Movie will find this news story useful.