www.garudabazaar.com

ஆஹா.. இது அதுல்ல.. சுந்தரிக்கும்.. பாரதி கண்ணம்மாவுக்கும் இப்படி ஒரு கனெக்ட் இருக்கா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி: பாரதி கண்ணம்மா சீரியலுக்கும், சன்.டிவி சுந்தரி சீரியலுக்கும் இருக்கும் ஒற்றுமை குறித்த வைரலான பேச்சு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

vijay tv Bharathi Kannamma Sun TV Sundari Serial common factor

பாரதி கண்ணம்மா

இந்த சீரியலில் கோர்ட் உத்தரவுப்படி விவாகரத்து கேட்ட பாரதி, 6 மாத காலம் கண்ணம்மாவுடன் சேர்ந்து, கண்ணம்மாவின் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இதனிடையே பாரதியின் வாழ்வில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பது குறித்த புரிதலை கொடுக்கும் அளவுக்கான சம்பவங்கள் அடுத்தடுத்து பாரதிக்கு நடந்து வருகின்றன.

குறிப்பாக, கண்ணம்மாவின் மீதான தன் அபிப்ராயங்களை, தற்போது நடக்கும் சம்பவங்களை கொண்டு பாரதி மறுபரிசீலனை செய்து வருகிறார். குறிப்பாக, வெண்பா ஒரு தவறான டாக்டர் மற்றும் தன் குடும்பத்துக்கு கெடுதல் செய்பவள் என்றும் பாரதி உணர்ந்துகொண்டுள்ளார்.

சுந்தரியின் புது அவதாரம் 

இதேபோல் சுந்தரியும் தனது கணவர் கார்த்திக் அனுவை 2வது மனைவியாக திருமணம் செய்துகொண்டு உறவு வைத்திருந்து வந்ததை அறிந்து அண்மையில் புயலாக மாறி, பொங்கி எழுந்துவிட்டார். கார்த்திக்கை பிடித்து திட்டி ஆவேசமாக பல பாய்ண்டுகளை பேசி, தன் வீட்டை விட்டு வெளியே போகுமாறு சொல்லி அனுப்பிவிட்டார்.

2 சீரியலுக்குமான ஒற்றுமை

இந்நிலையில் தான், சன் டி.வி. சுந்தரி சீரியலிலும், விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலிலும் இருக்கும் ஒற்றுமை குறித்து ரசிகர்கள் வைரலாக பேசி வருகின்றனர். அதன்படி தற்போது சுந்தரி வசித்து வரும் வீடும்,பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் வீடும் ஒரே வீடாக இருப்பதாக ரசிகர்கள் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

நாயகிகளிடையே ஒற்றுமை

மேலும் இந்த 2 சீரியல்களிலும் நாயகியின் வீடு ஒரே வீடாக இருப்பதன் ஒற்றுமை குறித்து பேசும் ரசிகர்கள் இந்த சீரியல்களில் நாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் குணாச்சித்திர ஒற்றுமைகள் குறித்தும் பேசத் தவறவில்லை.

அத்துடன் இந்த சீரியல்களின் நாயகிகளான கேப்ரியல்லா மற்றும் வினுஷா இருவரும் தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: "இது ஒரு குத்தமாயா!?".. lockdown-ல நடந்தது இதான்! தீயாய் பரவிய வீடியோவுக்கு மனோபாலா வைரல் ரியாக்‌ஷன்!

vijay tv Bharathi Kannamma Sun TV Sundari Serial common factor

People looking for online information on Bharathi Kannamma today, Bharathi kannamma today episode, Bharathi kannamma today promo, Bharathi kannamma today serial, Sundari Serial, Sundari today, Vijay tv serial will find this news story useful.