www.garudabazaar.com

"ஆம்பளயா நீ.. வெளில போடா!".. கார்த்திக் விஷயம் தெரிஞ்சு பத்ரகாளியா மாறுன சுந்தரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவி-யில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியலில் நடிகை கேப்ரியலா கதாநாயகியாக நடித்து வருகிறார்.

Sundari came to know karthik affair Sundari Serial 235 Episode

சுந்தரி சீரியல்

இந்த சீரியல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. சுந்தரியின் கணவர் கார்த்திக் சுந்தரிக்கு தெரியாமல், அணுவை இரண்டாவதாக திருமணம் செய்து, அதனை இருவரிடமும் மறைத்து வாழ்ந்து வந்தார். இதனிடையே சென்னையில் சுந்தரி ஒரு தனி வீட்டில் வசித்துவர, கார்த்தியோ சுந்தரியை அவ்வப்போது வந்து பார்ப்பதும், அனுவுடனேயே பெரும்பாலான நேரங்களை செலவிடுவதுமாய் இருந்து வந்தார்.

கலெக்டர் ஆகும் கனவு

இதுகுறித்து எதுவும் தெரியாத சுந்தரியோ கார்த்திக்கின் இரண்டாவது மனைவியான அனுவின் அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து வேலை செய்து வந்தார். சுந்தரியும் அனுவும் மிக நெருக்கமாகவும் ஒருவரின் மீது ஒருவர் அளவு கடந்த அன்பும் வைத்துள்ளனர்.

Also Read: ‘வாழவெச்ச BiggBoss வீடு’..  Eliminate ஆகும்போது எமோஷனல் ஆன தாமரை! இவ்ளோ ரசிகர்களை அழவெச்சுட்டாங்களே!

சுந்தரி அனுவின் அலுவலகத்தில் பணிபுரிந்தபடியே கலெக்டராக வேண்டும் என்ற தன்னுடைய கனவுகாக பகுதி நேரமாக படித்தும் வருகிறார். இந்நிலையில் கார்த்திக், தான் வெளிநாட்டுக்கு வேலை செய்ய செல்கிறேன் என சுந்தரியிடமும் அவரது குடும்பத்தினரிடமும் சொல்லிவிட்டு சுந்தரியிடம் இருந்து பிரிந்து அனுவுடனேயே வாழ ஆரம்பித்தார்.

எனக்கு அனுதான் முக்கியம்!

இதனைத்தொடர்ந்து சுந்தரி அனுவுடன் அனுவின் வீட்டில் இருக்கும்போது கார்த்திக்கின் 2வது மனைவி அனு தான் கர்ப்பமானதாக அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்துக்கொண்டே வந்து கார்த்திக்கை கட்டிப்பிடித்துவிட, அப்போது சுந்தரி கார்த்திக்கை பார்த்து விட, கார்த்திக்கும் சுந்தரியை பார்த்துவிட, சுந்தரி அதிர்ச்சியில் அங்கேயே மயக்கம் போட்டு கீழே விழுந்தார்.

Sundari came to know karthik affair Sundari Serial 235 Episode

Also Read: "3 விஷயத்த நியாபகம் வெச்சுக்க" .. BiggBoss-ல் பாவனிக்கு போன் பண்ணி சுருதி கொடுத்த பலே டிப்ஸ்!

பிறகு சுந்தரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அங்கு வரும் கார்த்திக், “யாரிடம் வேண்டுமானாலும் இதனை சொல்லிக்கொள். எனக்கு அனுதான் முக்கியம்!” என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

ஆசைக்கு ஒருத்தி அடுப்பங்கரைக்கு இன்னொருத்தியா..?

அதன் பின்னர் கார்த்திக்கின் நண்பன் கார்த்திக்கு போன் செய்து சுந்தரி பிரம்மை பிடித்தது போல் வீட்டில் இருப்பதாகவும், நேற்று வீட்டுக்குள் சென்றவள் இன்றுவரை இன்னும் கதவை திறக்காமல் இருப்பதாகவும் கார்த்திக்கிடம் கூறுகிறார். இதனைத்தொடர்ந்து சுந்தரியின் வீட்டுக்கு வரும் கார்த்திக்கிடம் சுந்தரி விஸ்வரூபம் எடுக்கிறாள்.

Also Read: ‘மத்த சீசன் contestants-கிட்ட இத பாத்ததே இல்ல!’.. கமல் சாரே சொல்லிட்டாரு.. குஷியான 5வது சீசன் housemates!

ஆம், மிகவும் கடுமையாக பேசியும், அடிக்கவும் செய்கிறார். சுந்தரி கார்த்திக்கிடம் பேசும்போது, “உன் முகத்துக்கும் என் முகத்துக்கும் பொருத்தம் இல்லையா.? அது உனக்கு இப்பதான் தெரியுமா.? ஊரக் கூட்டி  கல்யாணம் பண்ணும் போது தெரியலையா.? கட்டிக்கிட்ட பொண்டாட்டிய தொட்டுக்கூட பாக்க துப்பு இல்ல. ஆசைக்கு ஒருத்தி அடுப்பங்கரைக்கு இன்னொருத்தியா..?

Sundari came to know karthik affair Sundari Serial 235 Episode

இம்புட்டு நாளா ரெட்ட வாழ்க்க நடத்தி ஏமாத்திப்புட்டு, கட்டிகிட்டவ மெத்த கசங்காம, வச்சிக்கிட்டவ வாந்தி எடுத்து, அதுக்கு என் வாய்லையே ஸ்வீட்ட கொண்டுவந்து வச்சி, நா மயக்கம் போட்டு என்ன ஆஸ்பிட்டல்ல சேத்த பிறகுதான் தெரியுதா? நா உங்களுக்கு பொருத்தம் இல்லனு. கட்டுன பொண்டாட்டி மேல சுண்டு விரல் கூட படாமல் இருப்பதுதான் ஆம்பளதனமா.? போய் சொல்லிக்கோ சொல்லிக்கோனு சொல்றியே போய் அனு கிட்ட உன்ன பத்தி சொல்லவா?” என சுந்தரி கார்த்திக்கிடம் கேட்க, அதற்கு கார்த்திக் அதிர்ச்சி அடைந்து சுந்தரியை பார்க்கிறார்.

சுந்தரி ஆட்டம் ஆரம்பம்!

மேலும் வெளிய போடா என விரட்டியும் விட்டுவிட்டார் சுந்தரி. அதன் பிறகு கண்ணீர் விட்டு அழுத சுந்தரிக்கு கிருஷ்ணாவும், வீட்டுக்கார அம்மாவும் ஆறுதல் சொல்வதுடன், தொடர்ந்து சுந்தரி அனு வீட்டிலேதான் வேலை செய்ய வேண்டும் என்றும் சொல்கின்றனர்.

காரணம்,  எப்போது அனுவிடம் சுந்தரி அனைத்து உண்மையையும் சொல்லி விடுவாளோ என்று கார்த்திக் தினம் தினம் பயந்து சாக வேண்டும் என்றுகின்றனர். பின்னர் கண்ணீரை துடைத்துக்கொண்டு சுந்தரி எழுகிறாள். அப்பவே புரிந்திருக்கும் சுந்தரி ரசிகர்களுக்கு... இனி சுந்தரி ஆட்டம் ஆரம்பம்னு!

Also Read: "யார் ஜெயிச்சாலும் கட்டிங் போட்டுக்கலாம்!"...  BiggBoss வீட்டுக்குள் அபிஷேக் ராஜாவின் Viral போன் Talk!

Sundari came to know karthik affair Sundari Serial 235 Episode

People looking for online information on Sundari Serial, Sundari Serial episode, Sundari Serial today will find this news story useful.