"நீ எப்படிடா இப்படி வளந்த?".... ஆரியை பற்றி பதிவிட்ட விஜய் டிவி பிரபலம்... செம வைரல் இப்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

ஆரியை பற்றி விஜய் டிவி பிரபலம் vijay tv artist on aari

இந்நிலையில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் "Bigg Boss இவனப்பத்தி எழுதுனது போதும்னு நெனச்சாலும் விடமாட்டேங்குறானே!

வெளியேறிய Housemates எல்லாரும் உள்ள வந்துட்டாங்க. பாலாவுக்கு இருப்புகொள்ளல. எல்லார்கிட்டாயும் ஒக்காந்து ஒக்காந்து கேக்குறாரு.. "வெளிய என்னப்பத்தி என்ன நெனக்கிறாங்க.. positive-ஆ negative-ஆ.. பேரு ரொம்ப கெட்டுப்போச்சா.. ஆரியப்பத்தி என்ன சொல்றாங்க?" அப்படின்னு தவிக்கிறாரு. அந்தப் பாசக்குடும்பத்தப் பத்தி சொல்லவே வேணாம். நமக்கு எதுவும் காட்டப்படல. ஆனா அத எப்ப எப்படி தன்னோட பிள்ளைகளுக்குச் சொல்லணும்னு நல்லதங்காளுக்காத் தெரியாது? எல்லாம் சொல்லிருக்கும். இந்த மனுஷன் அமைதியா ஒக்காந்துருக்கான். எதப்பத்தியும் கவலப்படல. அதை சொல்லத்தொடங்குன நிஷாவையும், "எனக்கு எதுவும் சொல்லவேணாம். நல்லதும் வேணாம், கெட்டதும் வேணாம். அது எனக்கும் நல்லதுல்ல.. மத்தவங்களுக்கும் நியாயமா இருக்காது" அப்படின்னுட்டான்.நீ எப்படிடா இப்படி வளந்த?" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

ஆரியை பற்றி விஜய் டிவி பிரபலம் vijay tv artist on aari

People looking for online information on Aari, Biggboss4tamil will find this news story useful.