தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ SECOND LOOK குறித்த அதிரடி அப்டேட்!!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 14, 2020 06:37 PM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நியூ இயர் ட்ரீட்டாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்க, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யன் சூரியன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், விஜே ரம்யா, விஜய் டிவி புகழ் தீனா, கௌரி கிஷன், மகேந்திரன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் படத்தில் இரண்டாவது லுக் நாளை ஜனவரி 15ம் தேதி மாலை ஐந்து மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Second look poster of #Master tomorrow at 5pm pic.twitter.com/ta1WyIQqrJ
— Jagadish (@Jagadishbliss) January 14, 2020