தளபதி விஜய்யின் 'சுறா' இந்த காரணத்துக்காக ஸ்பெஷல் ஷோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 13, 2020 05:59 PM
தளபதி விஜய் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து 'மாஸ்டர்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறன்றனர்.
இந்நிலையில் தளபதி விஜய் நடித்த 'சுறா' திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியாகியது. இந்நிலையில் இந்த படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. எனவே இந்த படத்தை கேரளாவை சேரந்த கொல்லம் நண்பன்ஸ் என்ற ரசிகர் மன்றம் சார்பாக இந்த படம் ஸ்பெஷல் ஷோவாக திரையிட முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
இதனையடுத்து வருகிர ஜனவரி 26, காலை 8 மணிக்கு திரையிடப்படவிருப்பதாக தெரிவித்தனர். இந்த நிகழ்வில் கொல்லம் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இந்நிகழ்வில் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.