’மாஸ்டர்’ விஜய் சேதுபதியின் பிறந்தநாளுக்கு அவர் ஓவியத்தை பரிசளித்து வாழ்த்திய டைரக்டர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 14, 2020 05:15 PM
நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள், வரும் ஜனவரி 16ம் தேதி வருகிறது. ஆனால் இதற்கு முன்பாகவே நடைபெற்ற ஒரு எளிமையான கொண்டாட்டத்தில் இயக்குநர் பார்த்திபன் விஜய் சேதுபதி மற்றும் அவர் மனைவி இருக்கும் ஓவியத்தை பரிசாக வழங்கினார்.

அதில் ‘பிறந்த நாளில் மட்டுமல்ல பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் சிறக்க வாழ்த்தினேன்’ என்று அவர் கைப்பட எழுதியுள்ளார் பார்த்திபன். இயக்குநர் பார்த்திபன் ஒத்த செருப்பு சைஸ் 7 திரைப்படத்துக்குப் பிறகு. முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் தயாராகும் இரவின் நிழல் படத்துக்கான ஆயத்தப் பணிகளில் உள்ளார். விஜய் சேதுபதி, விஜய் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் பணியாற்றி வருகிறார்.
நண்பர் விஜய் சேதுபதி பிறந்த நாள்-3 பரிசுகள்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 14, 2020
1-chess King
"இன்று அன்று
என்றும் King"
2-HP நிறைந்த குதிரை
"ஓட்டம் தொடர...
3-Painting of mrs mr Of V S
"பிறந்த நாளில் மட்டுமல்ல
பிறக்கும் ஒவ்வொரு நாளிலும்
சிறக்க வாழ்த்தினேன்! pic.twitter.com/KOGtAE1G3D
தோள்களில்...
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 14, 2020
ரோஜா பேரணி ! pic.twitter.com/Cymb9qOf2b