www.garudabazaar.com
iTechUS

Thalapathy 67 : விஜய் நடிக்கும் தளபதி 67 .. ஓடிடி & சாட்டிலைட் உரிமங்கள் தொடர்பில் வெளியான அப்டேட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் தளபதி 67 என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார்.

Thalapathy 67 satellite and OTT rights Official update

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | லோகி யூனிவர்ஸ்..!! தளபதி விஜய்யை சந்தித்த சந்தீப் கிஷன்.. தீயாய் பரவும் ஃபோட்டோ.. Trending

நடிகர்கள் விஜய், த்ரிஷா, சஞ்சய் தய், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் மற்றும் பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. ராக்ஸ்டார் அனிருத், தளபதி 67 படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

Thalapathy 67 satellite and OTT rights Official update

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.

இதனிடையே இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சென்னை, கொடைக்கானல் படப்பிடிப்பு முடிந்து தளபதி 67 படக்குழு தற்போது காஷ்மீர் செல்ல உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy 67 satellite and OTT rights Official update

Images are subject to © copyright to their respective owners.

தனி சிறப்பு விமானத்தில் தளபதி 67 படக்குழு காஷ்மீர் படப்பிடிப்புக்கு செல்கிறது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும், ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸூம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

Also Read | Cool Suresh : அந்த படம் மட்டும் வொர்க் அவுட் ஆகலனா சினிமாவ விட்டே போயிடுவேன்..! - கூல் சுரேஷ் உருக்கம்.

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy 67 satellite and OTT rights Official update

People looking for online information on Lokesh Kanagaraj, Netflix, OTT, Satellite, Sun TV, Thalapathy 67, Trisha, Vijay will find this news story useful.