RRR Others USA
www.garudabazaar.com

தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்த ராஷ்மிகா..! கலர் ஃபுல் போஸ்டருடன் வெளியான சூப்பர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் 66 வது படத்தின் ஹீரோயின் பற்றிய அப்டேட்  வெளியாகி உள்ளது.

Vijay Starring Thalapathy 66 Movie Heroine Rashmika Mandanna

ரஞ்சித் தயாரிப்பில் தினேஷ் நடிக்கும் ’பேபி’… செம்ம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

கோலிவுட்டில் உள்ள மாஸ் ஹீரோக்களில் ஒருவர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் விஜய் கடைசியாக திரையில் காணப்பட்டார்.

Vijay Starring Thalapathy 66 Movie Heroine Rashmika Mandanna

இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு இடையேயான காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. கோவிட் லாக்டவுனுக்கு பிறகு கடந்த 2021 ஆண்டின் தொடக்கத்தில் வெளியான படங்களில் ஒன்றாக இந்தப் படம் இருந்தது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் தனது 65 வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள், முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டுக்கு ஒருநாள் முன்னதாக இந்த ஏப்ரல் மாதத்தில் 13 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது.

Vijay Starring Thalapathy 66 Movie Heroine Rashmika Mandanna

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், இவரது அடுத்த படம் - தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யுடன் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. ஊடகவியலாளர் சந்திப்பில், நடிகர் பிரகாஷ் ராஜ் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதை உறுதிபடுத்தினார்.

இந்த படத்தில் பணிபுரிவது பற்றி சில நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் தமன் டிவிட்டரில் சூசகமாக அறிவித்தார். அதே போல் எடிட்டராக பிரவீன் கே எல் பணிபுரிவதாக செய்திகள் வந்தன.  மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vijay Starring Thalapathy 66 Movie Heroine Rashmika Mandanna

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்று நடிகை ராஷ்மிகா மந்தனாவின் 27வது பிறந்தநாள் ஆகும். இதனை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இவர் தமிழில் சுல்தான் படத்தில் நடித்தவர். தெலுங்கில் புஷ்பா, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் நடித்துள்ளார்.

சன்னி லியோன் பேயாக நடிக்கும் Oh My Ghost… விஜய் சேதுபதி & வெங்கட் பிரபு வெளியிடும் First look

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Starring Thalapathy 66 Movie Heroine Rashmika Mandanna

People looking for online information on Rashmika Mandanna, Thalapathy 66, Thalapathy 66 Movie, Vijay will find this news story useful.