RRR Others USA

"4 கார் இருக்குறப்போ எதுக்கு சைக்கிள்ல போனீங்க??.." நெல்சனின் கேள்வி & விஜய் பதில்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில், ஏப்ரல் 13 ஆம் தேதி, பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Vijay and nelson fun interview promo creates attention

கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நெல்சன், பீஸ்ட் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், யோகி பாபு, VTV கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிரட்டலான 'பீஸ்ட்' டிரைலர்

அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய பாடல்கள், இன்று வரை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை ஆட்டம் போட வைத்து வருகிறது. அது மட்டுமில்லாமல், கடந்த 2 ஆம் தேதி, பீஸ்ட் டிரைலர் வெளியாகி இருந்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் அமைந்திருந்த நிலையில், விஜய்யின் சண்டை போடும் காட்சிகள் மற்றும் அவரின் வசனங்கள், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு..

இதனிடையே, படம் வெளியாவதற்கு முன்பாக, விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது இன்னும் ஒரு செய்தி. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இயக்குனர் நெல்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, அவர் கேட்கும் கேள்விகளுக்கு விஜய் பதிலளிக்க உள்ளார்.

பாக்கெட்ல தேடி பாருங்க..

'விஜய்யுடன் நேருக்கு நேர்' என இந்த நிகழ்ச்சிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 10) இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி, சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பான ப்ரோமோக்களையும் சன் டிவி தற்போது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், குட்டி ஸ்டோரி ஒன்றை நெல்சன் கேட்க, ஸ்டாக் இல்லை என விஜய் பதிலளிக்கிறார்.

சைக்கிள் எதுக்கு??

உடனடியாக, நெல்சனும் ,"வேணும்னா பாக்கெட்'ல தேடி பாருங்க சார். எதுனா இருக்கும்" என கூறவே, "ஷூட்டிங் முடிஞ்சு போச்சுங்கிற தைரியத்துல இஷ்டத்துக்கு கேக்க வேண்டியது" என விஜய் கூறுகிறார். இன்னொரு ப்ரோமோவில், ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் பாடுவதும், வாக்களிக்க சென்ற போது, சைக்கிளுடன் ஏன் சென்றீர்கள் என நெல்சன் கேட்கும் கேள்விகளும் இடம்பெற்றுள்ளது.

Vijay and nelson fun interview promo creates attention

முற்றிலும் மாறுபட்ட கலகலப்பான ஒரு விஜய்யை காண வேண்டி, நிகழ்ச்சியை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay and nelson fun interview promo creates attention

People looking for online information on Anirudh Ravichander, Beast, Beast Trailer, Fun Promo, Manoj Paramahamasa, Nelson Dilipkumar, Pooja Hegde, Selvaraghavan, Vijay, Vijay Interview will find this news story useful.