www.garudabazaar.com

வடிவேல் பாலாஜியின் மறைவால்., உடைந்து போன ரோபோ ஷங்கர் - தீனா.. 'கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ'.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடிவேல் பாலாஜியின் மறைவை அடுத்து, அவரை பற்றி நடிகர்கள் ரோபோ ஷங்கர், தீனா உள்ளிட்டோர் உருக்கமாக பேசியுள்ளனர். 

வடிவேல் பாலாஜி மறைவால் கலக்கம் | Actors robo shankar kpy dheena breaks on vadivel balaji death

சின்னத்திரை காமெடி ஷோக்களில், தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி. நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதனிடையே, உடல்நில கோளாறு காரணமாக, இன்று அவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வடிவேல் பாலாஜி மறைவால் கலக்கம் | Actors robo shankar kpy dheena breaks on vadivel balaji death

இந்நிலையில் வடிவேல் பாலாஜியுடன் பயணித்த நடிகர்களான, ரோபோ ஷங்கர், தீனா உள்ளிட்டோர் அவரை பற்றி உருக்கமாக பேசியுள்ளனர். இதுகுறித்து பேசிய ரோபோ ஷங்கர், ''என்னுடன் 19 வருடம் மேடையில் பயணித்த கலைஞன் வடிவேல் பாலாஜி. ஒரே ஆளாக மேடையில், அனைவரிடமும் பேசி, மக்களை சிரிக்க வைக்க கூடிய அற்புதமாக கலைஞன் அவர். பத்து நாட்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது கூட அவர் விரைவில் மீண்டு வருவார் என நம்பினோம். ஆனால், அடுத்த பத்து நாட்களில் இப்படி ஒரு செய்தியை கேட்பதை, என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை'' என கண்ணீருடன் தெரிவித்துள்ளார். 

மேலும் ரோபோ ஷங்கரின் மனைவி நம்மிடம் பேசுகையில் கூறியதாவது, ''அவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் இருந்தே, நாங்கள் நண்பர்கள். அவரை இழந்துவிட்டது எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டோம். வடிவேல் பாலாஜியின் இடத்தை நிரப்பவே முடியாது. இருந்தாலும், அந்த குடும்பத்துக்கு என்ன செய்ய வேண்டும் என முயற்சிப்போம். பாலாஜியின் குடும்பத்துக்காக அனைவரும் வேண்டி கொள்ளுங்கள்'' என அவர் தெரிவித்தார். 

இதுகுறித்து பேசிய தீனா கூறியதாவது, ''நான் உதவி இயக்குநராக இருந்த காலத்திலேயே, என்னை உற்சாகப்படுத்தியவர் வடிவேல் பாலாஜி அண்ணாதான். வலிமையான மனிதருக்கு இப்படி ஆனது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நானும் அவரை மருத்துவமனைக்கு சென்று பார்க்கலாம் என இருந்தேன், அதற்குள் இப்படி ஆகிவிட்டது. அவரை போன்ற திறமையாளர்கள் நமக்கு எப்போதும் தேவை. அவர் திரும்பி வந்தால், நன்றாக இருக்கும் என நினைக்க தோன்றுகிறது'' என அவர் உருக்கமாக பேசினார். 

 

வடிவேல் பாலாஜியின் மறைவால்., உடைந்து போன ரோபோ ஷங்கர் - தீனா.. 'கண்ணீருடன் வெளியிட்ட வீடியோ'. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

வடிவேல் பாலாஜி மறைவால் கலக்கம் | Actors robo shankar kpy dheena breaks on vadivel balaji death

People looking for online information on KPY Dheena, Robo shankar, Vadivel Balaji, Vadivel Balaji Death will find this news story useful.