Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

கவுதம் கார்த்திக்கின் அடுத்த படம்.. செம்ம ரகளையான First Look .. ட்விட்டரில் பகிர்ந்த விஜய் சேதுபதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஶ்ரீவாரி பிலிம்ஸின் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ First Look போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Gautham Karthik next film vijay sethupathi tweet

ஶ்ரீவாரி பிலிம்ஸ் P.ரங்கநாதன் தயாரிப்பில் நந்தா பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக கவுதம் கார்த்திக் நடிக்கும் 16வது படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இப்படத்தின்  First Look போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை விஜய் சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். 

இதில் சிவாத்மிகா ராஜசேகர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார். தவிர, இந்த படத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து சேரன், சிங்கம் புலி, ஜோ மல்லூரி, சரவணன், மைனா நந்தினி என மற்றும் பல நடிகர்கள் பட்டாளமே நடிக்கின்றனர். இந்த படத்தின் போஸ்டரில் இருந்தே, இப்படம் குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்பது தெரியவருகிறது.

ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி, ஜிகினா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கும் இப்படத்துக்கு சித்துகுமார் இசையமைக்கிறார். பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி, பாடல்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Gautham Karthik next film vijay sethupathi tweet

People looking for online information on AnandhamVilayadumVeedu, Borraa Balabharani, Gautham Karthik, Nanda Periyasamy, Siddhu Kumar will find this news story useful.