மணிரத்னத்தின் மல்டி-ஸ்டாரர் படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 14, 2020 04:20 PM
இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பாக தயாரித்துள்ள படம் வானம் கொட்டட்டும் . இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து கதை எழுதி, தனா இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படைவீரன்’ திரைப்படத்தை இயக்கியவர். ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் மூலம் சென்சேஷனல் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த படத்துக்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே இந்த படத்தின் டீசர் மற்றும் ஒரு சில பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ஒட்டுமொத்த பாடல்களையும் ட்ரெய்லரையும் ஜனவரி 23ம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.வானம் கொட்டட்டும் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வர உள்ளது.
Get ready for an evening of music, rain and lots of love!#VaanamKottattum - Music & Trailer launch on 23 January 2020 🌧️🎶#ManiRatnam @Dhana236 @iamVikramPrabhu @aishu_dil @MadonnaSebast14 @realsarathkumar @realradikaa @sidsriram @ynotxworld @SonyMusicSouth pic.twitter.com/7eoMI0oPgR
— Madras Talkies (@MadrasTalkies_) January 14, 2020