“இது ஹிட்லர் காலத்து… விக்ரம் படத்துல ” பிரபல நிகழ்ச்சியில் கமல் பகிர்ந்த சீக்ரெட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல் கலந்துகொள்ளும் விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறன்று ஒளிபரப்பாக உள்ளது.

Kamal shared an interesting fact from vikram movie

விக்ரம் ரிலீஸ்…

கமல்ஹாசன் நடிப்பில்  உருவாகி வரும் ‘விக்ரம்’திரைப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விஸ்வரூபம் 2 திரைப்படத்துக்குப் பிறகு நான்காண்டு இடைவெளியில் கமலின் அடுத்த படமாக இந்த திரைப்படம் ரிலீஸாவதால் படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Kamal shared an interesting fact from vikram movie

பிற மொழி வெளியீடுகள்…

தமிழில் விக்ரம் திரைப்படத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. மலையாளத்தில் பிரபல தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் வெளியிடுகிறது. தெலுங்கில் ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தியில் பென் ஸ்டுடீயோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வெளிநாட்டு உரிமையை ap இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஸ்டார் நெட்வொர்க் நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தின் வியாபாரம் நடந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

Kamal shared an interesting fact from vikram movie

விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சி…

இந்நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு ‘விக்ரம் ஸ்பெஷல்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு படம் சம்மந்தமான சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் கமலிடம் திவ்யதர்ஷினி ”துப்பாக்கிகள் மேல் அப்படி என்ன சார் ஒரு ஈர்ப்பு” என்று கேட்க கமல் “இது என்னுடைய சொந்த துப்பாக்கி. ஹிட்லர் காலத்து துப்பாக்கி. படத்துல கூட அப்படி ஒன்னு வரும். என்னுடைய சொந்த லைசன்ஸ் உள்ள துப்பாக்கி” என்று கூறியுள்ளார். விக்ரம் திரைப்படத்தின் கதைக்களத்தில் துப்பாக்கிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பது டிரைலர் மற்றும் இதுவரை வெளியான ப்ரமோஷன்களில் இருந்து தெரியவருகிறது. இப்போது கமல் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

Kamal shared an interesting fact from vikram movie

தொடர்புடைய இணைப்புகள்

Kamal shared an interesting fact from vikram movie

People looking for online information on KAMALHAASAN, Vikram, Vikram special will find this news story useful.