www.garudabazaar.com

விஜய் சேதுபதி கேமியோ ரோலில்.. 'சஞ்சிதா ஷெட்டி'யின் புதிய படம்.. மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் "எஸ்தல் எண்டர்டெய்னர்" நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் திரைப்படம் "அழகிய கண்ணே".

vijay sethupathi cameo role in Sanchita Shetty azhagiya kanne

இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியின் துணை இயக்குனர் R.விஜயகுமார் இயக்குகிறார். லியோ சிவக்குமார் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இயக்குநர் பிரபு சாலமன் மற்றும் மேலும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார்.  காடன் திரைப்பட ஒளிப்பதிவாளர் A.R.அசோக் குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவரான சங்கத் தமிழன் கவனிக்கிறார். நடன இயக்குநராக ராதிகா மாஸ்டரும், படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை இளையராஜா செல்வமும் கவனிக்கிறார்கள்.

vijay sethupathi cameo role in Sanchita Shetty azhagiya kanne

இத்திரைப்படத்தில்  ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கெளரவ தோற்றத்தில்  நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் திரைப்படத்தில் சஞ்சிதா ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: ‘சந்தானம்’ நடிப்பில் நீண்ட நாள் காத்திருந்த ‘அதகள’ காமெடி படம் ‘பிரபல’ ஓடிடியில் ரிலீஸா??

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi cameo role in Sanchita Shetty azhagiya kanne

People looking for online information on AzhagiyaKanne, NR Raghunanthan, Prabhu Solomon, Sanchita Shetty, Seenu ramasamy, Vijay Sethupathi will find this news story useful.