www.garudabazaar.com

விஜய் சேதுபதி .. சந்தீப் கிஷன் .. ஆதி .. சூர மாஸ் காம்போ! .. இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி மற்றும் ஆதி நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.

Vijay Sethupathi Sundeep Kishan Aadhi team up update

ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தினை இயக்கியவர் ரஞ்சித் ஜெயக்கொடி. இந்நிலையில் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தில் தமிழ், தெலுங்கு திரையுலகின் மார்க்கெட்களை தக்க வைத்துள்ள நடிகர்களான விஜய் சேதுபதி, சந்தீப் கிஷன் மற்றும் நடிகர் ஆதி இணைவதாக தெரிகிறது.

இந்த மல்டி ஸ்டார் படம் பற்றிய தகவலை கேள்விப்படும்போதே, இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறுவதை தவிர்க்க முடிவதில்லை. இதனிடையே நடிகர் விஜய் சேதுபதி சன் டி.வியில் ஒளிபரப்பாகவுள்ள மாஸ்டர் செஃப் தமிழ் எனும் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

தவிர, விஜய் சேதுபதி நடிப்பிலான லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல், கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 

இதனிடையே லிங்குசாமி இயக்கத்தில், ராம் பொத்தினேனி நடிக்கும் திரைப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 'சன்னி லியோன்' படத்தில் தர்ஷா குப்தா.. என்ன படம்? வேற யார்லாம் நடிக்குறாங்க? செம்ம அப்டேட்!

Vijay Sethupathi Sundeep Kishan Aadhi team up update

People looking for online information on Aadhi, Sundeep Kishan, Vijay Sethupathi will find this news story useful.