www.garudabazaar.com

Beast mode: அதிரடி சரவெடியாய் பீஸ்ட் படத்தின் லேட்டஸ்ட் viral போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தற்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

Beast movie new poster went viral in internet

“Poster-லயே.. Action இப்படி ஃபயர் ஆகுது”…. விஷால் படத்தின் premiere தேதியை அறிவித்த ஜி தமிழ்!

பேன் இந்தியா ‘பீஸ்ட்’

மாஸ்டர் வெற்றிக்குப் பிறகு விஜய்யும், டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் நெல்சனும் பீஸ்ட் படத்தில் இணைந்துள்ளனர். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.  இந்த படத்தில் விஜய்யோடு பூஜா ஹெக்டே, யோகிபாபு, ரெட்டின்ஸ் கிங்ஸ்லே உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  முக்கியக் கதாபாத்திரத்தில் இயக்குனர் செல்வராகவன், நடித்துள்ளார். ஏப்ரல் 13  ஆம் தேதி பேன் இந்தியா திரைப்படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Beast movie new poster went viral in internet

கலக்கிய ப்ரமோஷன்கள்…

பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வருகின்றன. அதுபோல இதுவரை வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. அரபிக்குத்து பாடல் யுடியூபில் 200 மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனைப் படைத்துள்ளது. படத்தின் ஐந்து மொழிகளில் வெளியாகி பரவலானக் கவனத்தைப் பெற்று வருகிறது. பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இந்த படத்தைப் பார்த்து பாராட்டி டிவீட் செய்தது வட இந்தியாவிலும் படத்தின் மீதான கவனத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ரிலீஸ் விவரம்…

பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. தமிழக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.படத்தின் டிக்கெட் முன்பதிவும் துவங்கி உள்ளது.  தமிழகத்தில் சிறப்புக் காட்சிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Beast movie new poster went viral in internet

வைரலாகும் போஸ்டர்கள்..,

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பீஸ்ட் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் விஜய், யோகி பாபு, ரெட்டின்ஸ், பூஜா ஹெக்டே மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் இடம்பெற்றுள்ளனர். மிரட்டலான லுக்கில் இந்த போஸ்டரில் விஜய் தோற்றமளிக்கிறார். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதற்கு முன்னதாக வெளியான போஸ்டரில் இரு சக்கர வாகனத்தில் எல்லை பாதுகாப்பு பகுதியில் விஜய் வாகனத்தில் செல்வது போல லுக் அமைந்திருந்தது.

”திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்.. ஒருத்தன் வந்தா ”…. வெளியானது மாஸ் பீஸ்ட் mode பாடல்!

தொடர்புடைய இணைப்புகள்

Beast movie new poster went viral in internet

People looking for online information on Anirudh, Beast, Beast Movie New Poster, Nelson Dilipkumar, Pooja Hegde, Redin Kingsley, Vijay, Yogi Babu will find this news story useful.