பிகிலிலிருந்து தளபதி விஜய் - நயன்தாராவின் ரொமான்டிக்கான "உனக்காக" பாடல் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 18, 2019 04:36 PM
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்திருக்கும் படம் பிகில். அட்லி இயக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்

தீபாவளியை முன்னிட்டு வெளியாகவிருக்கிற இந்த படத்தில் நயன்தாரா, கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே சிங்கப்பெண்ணே, வெறித்தனம் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை (செப்டம்பர் 19) நடைபெறவிருக்கிறது.
இந்த படத்தில் இருந்து "உனக்காக" என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் மதுர தாரா தல்லூரி பாட பாடலாசிரியர் விவேக் இப்பாடலை எழுதியுள்ளார்.
பிகிலிலிருந்து தளபதி விஜய் - நயன்தாராவின் ரொமான்டிக்கான "உனக்காக" பாடல் இதோ வீடியோ
Tags : Bigil, Vijay, Nayanthara, A.R Rahman