www.garudabazaar.com

‘ட்விட்டர்ல இருக்கோமா??’.. விஜய் மகன் ஜேசன் சஜ்சய், மகள் திவ்யா சாஷா அதிகாரப்பூர்வ விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த முன்னணி மாஸ் ஹீரோ நம் தளபதி விஜய்.

vijay children jason sanjay dhivya shasha official clarification

ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தையே தனக்கென வைத்திருக்கும் நடிகர் விஜயின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு அளித்து வருகின்றனர். இதனிடையே நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி65, அதனைத் தொடர்ந்து வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி66 பட அப்டேட்டுகள் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தன.

இப்படி விஜய் நடிக்கும் திரைப்படங்கள் பரவலாக பேசப்படுவதுடன் அவருடைய குடும்பம், வாழ்க்கை குறித்த இன்ஸ்பிரேஷனலான விஷயங்களும் அவ்வப்போது இணையவாசிகளால் பகிரப்படுவதும் உண்டு. ஆனால் அவற்றுள் சில சமயம் இணையவாசிகளால் சில குழப்பங்களும் விளைவிக்கப்பட்டு விடுகின்றன.

ஆம், தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா உள்ளிட்டோரின் சமூக வலைதள கணக்குகள் என்கிற பெயரில் தினமும் பல பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. இந்நிலையில் தான் தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா இருவரும் இதுகுறித்து முக்கியமான மற்றும் அதிகாரப்பூர்வமான விளக்கத்தினை அளித்துள்ளனர். 

அதன்படி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா ஆகியோர்  பெயர்களில் பிரபல சமூக ஊடகமான ட்விட்டரில் தொடங்கப்பட்ட கணக்குகள் உண்மையானவை என்று நம்பப்பட்டது மற்றும் பலர் அதைப் பின்பற்றத் தொடங்கினர்.

ஆனால் தளபதி விஜயின் மகன், மகள் இருவருமே  ட்விட்டரில் இல்லை என்பதை தற்போது உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஷாஷா ஆகியோர் ட்விட்டரில் இல்லை. ட்விட்டரில் அவர்களின் பெயர்களில் உள்ள கணக்குகள் போலி கணக்குகள்.” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: ‘மொட்டை’ ராஜேந்திரனை தளபதியுடன் பாத்துருக்கோம்!..  ஆனா குட்டி தளபதியோட??.. தீயாய் பரவும் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

vijay children jason sanjay dhivya shasha official clarification

People looking for online information on Dhivyasasha, JasonSanjay, Thalapathy Vijay will find this news story useful.