அமெரிக்காவில் களைக்கட்டிய தளபதி விஜய்யின் ‘பிகில்’ கொண்டாட்டம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 29, 2019 12:38 PM
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் கொண்டாட்டம் அமெரிக்க தளபதி ரசிகர்கள் மத்தியில் களைக்கட்டியுள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் சுமார் ரூ.180 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கியுள்ள திரைப்படம் ‘பிகில்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
முதன்முறையாக ‘பிகில்’ திரைப்படத்தில் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடிகர் விஜய் நடித்துள்ள இப்படத்தை தளபதி ரசிகர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இப்படத்திற்கு தமிழகம், கேரளா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் ஓஹியோ பகுதியில் உள்ள சின்சினாட்டி நகரிலும், மில்ஃபோட் நகரிலும் தளபதி ரசிகர்களான மெட்ராஸ் மாமீஸ் வெறித்தனமாக ‘பிகில்’ திரைப்படத்திற்கு வரவேற்பளித்து தீபாவளியை தளபதி விஜய்யின் பிகில் சத்தத்துடன் கொண்டாடினர்.
மெட்ராஸ் மாமீஸ் சிவப்பு நிற டி-ஷர்ட் மற்றும் லுங்கி அணிந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.