இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெறி மற்றும் மெர்சல் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் 3ஆவது புதிய படம் தளபதி63. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்தின் தலைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தளபதி63 படத்திற்கு பிகில் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கில்லி, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் இப்படத்தில் விளையாட்டு கதையில் நடித்து வருகிறார்.
அதுவும், கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், அப்பா மற்றும் மகன் என்று இரு கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதை போலவே, 2 கெட்அப்புகளில், விஜய் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் ஒரு விஜய் கால்பந்தாட்ட வீரர் போல ஜெர்சி அணிந்து நின்றபடி உள்ளார். மற்றொரு விஜய் நடுத்தர வயதுள்ளவர் போல காட்சியளிக்கிறார். அவர் உட்கார்ந்த நிலையில் உள்ளார்.
சுற்றியுள்ள இடத்தை பார்க்கும்போது அது மீன் மார்க்கெட் என்பது தெரிகிறது. கருவாடு, மீன் போன்றவை விற்பனைக்கு உள்ளன. உட்கார்ந்திருக்கும் விஜய் காவி வேட்டி கட்டியுள்ளார். அவர் முன்பாக, இறைச்சி வெட்ட பயன்படுத்தும் ஒரு மரத்துண்டு உள்ளது. அதன் மீது அரிவாள் ஒன்று வெட்டி வைக்கப்பட்ட நிலையில் உள்ளது.
படத்தில் விஜய் இரு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். காவி வேட்டி கட்டியுள்ள விஜய், அந்த பகுதி தாதாவாக இருக்க கூடும் என்கிறார்கள். வட சென்னை வாழ்க்கை முறையை வைத்து, படம் உருவாகுவது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து பார்த்தால் தெளிவாக தெரிகிறது
இப்படத்தில் மகன் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் பிகில் என்றும் அதே போன்று, வில்லு படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியான நயன்தாராவின் கதாபாத்திரத்தின் பெயர் ஏஞ்சல் என்றும் ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், இது குறித்து எந்த முறையான அறிவிப்பும் வெளியாகவில்லை.
அதேபோல், தளபதி 63 என்று கூறப்பட்ட இப்படத்தின் தலைப்பு ‘பிகில்’ என்ற தலைப்பு தேர்வு செய்யப்பட்டது பற்றியும் நாம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜூன் 22ம் தேதியான நாளை விஜய் தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தாறுமாறாக சிறப்பிக்கும் வகையில், தளபதி63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தொடர்ந்து 22ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியாக உள்ளது.
Kalpathi S Aghoram proudly presents our very own #Thalapathy @actorvijay as #BIGIL @Atlee_dir @arrahman @Ags_production pic.twitter.com/cRqu3EHI01
— Archana Kalpathi (@archanakalpathi) June 21, 2019
"பிகில்" போஸ்டர்ல என்னவெல்லாம் இருக்கு : தளபதி 63 பிரேக்டவுன் வீடியோ