நயன்தாராவின் பிறந்தநாளை எளிய மக்களுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவனின் படக்குழு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 19, 2019 09:21 AM
'பிகில்' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு நயன்தாரா 'நெற்றிக்கண்' என்ற படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது தனது ரௌடி பிக்சர்ஸ் சார்பாக தயாரித்து வருகிறார். நேற்று (நவம்பர் 18) நயன்தாராவின் பிறந்த தினம் என்பதால் அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நெற்றிக்கண் படக்குழு நயன்தாராவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஆதரவற்றோர் 1000 பேருக்கு உணவளித்துள்ளனர். அதில் பார்வை மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள் மற்றும் 4ற்கும் மேற்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களும் அடக்கம்
Tags : Nayanthara, Vignesh shivan, Netrikann