IRAVIN NIZHAL
www.garudabazaar.com

TRENDING: ரொமான்டிக் லுக்கில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. இந்த ஜோடி சூப்பருங்க! வைரல் PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்னேஷ் சிவன், நயன்தாராவின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Vignesh Shivan Nayanthara Latest Image Went Viral

விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மகாபலிபுரத்தில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

Vignesh Shivan Nayanthara Latest Image Went Viral

இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கு சென்று ஜோடியாக சாமி தரிசனம் செய்தனர்.

அதன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தாய்லாந்து ரசிகர்களுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களும் வைரலாகின. தேனிலவில் இருந்து தொடர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்தார்.

இந்நிலையில் நயன்தாரா & விக்னேஷ் சிவன் சமீபத்தில் மும்பை சென்றிருந்தனர். அங்கு அவர்கள் எடுத்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகின. தற்போது விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புதிய ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

Vignesh Shivan Nayanthara Latest Image Went Viral

நயன்தாரா தற்போது ஷாருக்கானின் ஜவான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அவர் பல படங்கள் வெவ்வேறு நிலைகளில் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.  மறுபுறம், விக்னேஷ் சிவன் இப்போது அஜித்துடன் ஏகே 62 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள படத்திற்கு தயாராகி வருகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Latest Image Went Viral

People looking for online information on Nayanthara, Vignesh shivan, Wikki will find this news story useful.