IRAVIN NIZHAL
www.garudabazaar.com

இந்தியிலும் ரிலீஸ் ஆகும் 'தி லெஜண்ட்' திரைப்படம்.. மாஸ் காட்டும் சரவணன்! செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தி லெஜண்ட் திரைப்படம் இந்தியில் ரிலீஸ் ஆக உள்ளது.

The Legend Movie Hindi Theatrical Rights Bagged by Ganesh films

Also Read | விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் புதிய படம்.. படப்பூஜைக்கு யாரெல்லாம் வந்திருக்காங்கனு பாருங்க!

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து  கதாநாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

கோபுரம் சினிமாஸ் ஜி என் அன்புச்செழியன், அதிக முன் பணம்  கொடுத்து இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். சுமார் 30 கோடிக்கு இந்த படத்தின் உரிமையை அன்புச் செழியன் கைப்பற்றியுள்ளார்.

The Legend Movie Hindi Theatrical Rights Bagged by Ganesh films

இந்த படத்தின் கேரளா ரிலீஸ் உரிமத்தை பிரபல மலையாள தயாரிப்பாளர் மேஜிக் பிரேம்ஸ் ஸிஸ்டின் ஸ்டீபன் கைப்பற்றி உள்ளார்.

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ திரைப்படம், எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில்  இப்படம்  ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.

The Legend Movie Hindi Theatrical Rights Bagged by Ganesh films

 

பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா தி லெஜண்ட் திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரும் ரசித்து மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் அனைவரின் மனதிலும் ஒரு மிக பெரிய பாசிட்டிவ் எண்ணத்தை உணரும் வகையில் திரைக்கதையும் வசனமும் எழுதப்பட்டிருக்கிறது.

The Legend Movie Hindi Theatrical Rights Bagged by Ganesh films

ஜனரஞ்சக கலைஞன் என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் மட்டுமன்றி, இப்படம் தனக்கு ஒரு முக்கியமான படம் என பல நேரங்களில் லெஜண்ட் சரவணன் மற்றும் படக்குழுவினருடன் அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய முன்னணி நகைச்சுவை நாயகன் யோகி பாபு முக்கிய வேடத்தில் லெஜண்ட் சரவணனுடன் படத்தில் பயணிக்கிறார்.

The Legend Movie Hindi Theatrical Rights Bagged by Ganesh films

படத்தில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் லெஜண்ட் சரவணனுடன் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இந்தி பதிப்பின் ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தரான கணேஷ் பிலிம்ஸ் நம்பி ராஜன் கைப்பற்றி உள்ளார். இதற்கான ஒப்பந்தம் தயாரிப்பாளர் & வினியோகஸ்தர் முன்னிலையில் கையெழுத்தானது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

Also Read | அனிருத் - SK காம்போ Song.. பாகுபலி மியூசிக் டைரக்டரின் ட்வீட்.. அனிருத்தின் வைரல் Reply

The Legend Movie Hindi Theatrical Rights Bagged by Ganesh films

People looking for online information on Ganesh films, Saravanan The Legend Movie, The Legend movie, The Legend Movie Hindi will find this news story useful.