www.garudabazaar.com

Viduthalai : வைரல் ஆகும் விடுதலை BTS படங்கள்.. சூரி வெளியிட்ட அடுத்த அப்டேட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விண்ணைத்தாண்டி வருவாயா, கோ போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிகளை தந்த கூட்டணியாக Red Giant Movies & RS Infotainment  நிறுவன தயாரிப்பாளர்கள், திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் எல்ட்ரெட் குமார்  மீண்டும்  இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள்.

Viduthalai shoot wrapped kodaikkaanam viral pics

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில், கதாநாயகனாக சூரி மற்றும் கதை நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். 

இப்படத்துக்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் இவர்களுடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர்.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம், திண்டுக்கல் சிறுமலை, பண்ருட்டி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியதை அடுத்து, படம்  பரபரப்பாக தயாராகி வருகிறது. பீட்டர் ஹெய்ன் சண்டைக்காட்சி இயக்குனராக பணியாற்றும் இப்படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகள் கொடைக்கானல் பகுதிகளில் நடந்த  ஷூட்டிங் ஸ்பாட் BTS புகைப்படங்கள் அண்மையில் வைரலாகின.

இந்நிலையில் இப்படத்தின் கொடைக்கானல் பகுதி ஷூட்டிங் நிறைவடைந்தது தொடர்பான புகைப்படங்கள் & வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இப்படத்தின் நாயகன் சூரியும், இது தொடர்பான புகைப்படங்களை தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  விடுதலை படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொடர்புடைய இணைப்புகள்

Viduthalai shoot wrapped kodaikkaanam viral pics

People looking for online information on Ilaiyaraaja, Illayaraja, Soori, Vetrimaaran, Viduthalai, Vijay Sethupathi will find this news story useful.