அருண் விஜய் நடிப்பில் வெளியான `தடம்' திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்தவர் வித்யா பிரதீப். மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே சூர்யா நடித்த ‘பசங்க 2’ திரைப்படத்தில் நடித்திருந்த வித்யா, தற்போது ‘தடம்’ படத்தில் மலர்விழி எனும் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `நாயகி' சீரியலிலும் வித்யா பிரதீப் கோப்பக்குமார் நடித்து வருகிறார்.
நடிகை வித்யா பிரதீப், விஜே நிக்கியின் Behindwoods-ன் Kiss Me Hug Me Slap Me செக்மெண்டில் கலந்துக் கொண்டார். அப்போது, விஜே நிக்கிக்கு வித்தியாசமான டாஸ்குகளை கொடுத்துள்ளார். நிக்கியின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தரை நீச்சல் அடிக்க சொல்லி டாஸ்க் கொடுத்தார்.
KHS கேம்: விஜே-வை தரை நீச்சல் அடிக்கவிட்ட நாயகி சீரியல் ஹீரோயின் வீடியோ