பிரபல இயக்குநருடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் 'ஆயிரம் ஜென்மங்கள்' வீடியோ சாங் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 27, 2019 01:41 PM
பிரபல இயக்குநர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் 'ஆயிரம் ஜென்மங்கள்'. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக இஷா ரெபா, சாக்ஷி அகவர்வால், நிகிஷா படேல் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் சார்பாக ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார்.
இந்த படத்துக்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து அருப்புக்கோட்டையிலே என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை கருங்குயில் கணேஷ் எழுதி பாடியுள்ளார். அவருடன் மீனாக்ஷி, இளையராஜா உள்ளிட்டோரும் இந்த பாடலை பாடியுள்ளனர்.
பிரபல இயக்குநருடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் 'ஆயிரம் ஜென்மங்கள்' வீடியோ சாங் இதோ வீடியோ
Tags : Aayiram Jenmangal, GV Prakash Kumar, Eesha Rebba