தன் அடுத்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்ட சாக்ஷி அகர்வால்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 14, 2019 01:16 PM
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் மூலம் பலரும் அறியும் ஒரு பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ள இவர், அஜித் நடித்த விஸ்வாசம் உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் கன்னடம் மொழியிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சாக்ஷி அகர்வால், ஜி.வி.பிரகாஷின் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடத்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் தொடங்கி மனம் கொத்தி பறவை, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் எழில். விஜய், அஜித் தொடங்கி சிவகார்த்திகேயன், விமல் உள்ளிட்ட இளம் நடிகர்கள் வரை பலரை வைத்து படம் இயக்கியவர் முதன்முறையாக ஜி.வி.பிரகாஷுடன் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தில் இணைந்துள்ளார்.
ஐயங்கரன், 100% காதல் படங்களை தொடர்ந்து ஆயிரம் ஜென்மங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் காமெடி த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது. ஜிவி.பிரகாஷுக்கு ஜோடியாக சாக்ஷி அகர்வால் நடிக்கிறார். நிகிஷா படேல், சதீஷ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.