www.garudabazaar.com

எவ்ளோ மாசம் ஆச்சு.. தியேட்டர்ல.. அதுவும் விஜய் சேதுபதி படம் ரிலீஸ்!!. எப்போ தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் லாபம்.

vijay sethupathi movie theatrical release date லாபம்

விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன், சாய் தன்சிகா, கலையரசன், ரமேஷ் திலக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லாபம் திரைப்படத்தை விஜய் சேதுபதி புரொடக்‌ஷனுடன் இணைந்து 7C's எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது.

இந்நிலையில் தான் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை, பேராண்மை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் நடிப்பில் புறம்போக்கு என்கிற பொதுவுடமை  படத்தையும் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் இயக்கத்தில் லாபம் திரைப்படத்தை இயக்கி வந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளின் போது மறைந்தார்.

ராம்ஜி ஒளிப்பதிவு செய்த இந்த படத்துக்கு, டி இமான் இசையமைத்தார். OTT தளங்களில் இந்த படம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி மகிழ்ச்சியுடன் ட்வீட் செய்துள்ளார்.

லாக்டவுனுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகத் தயாராக இருக்கும் முதல் பெரிய பட்ஜெட் தமிழ் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

Also Read: அமானுஷ்யம்.. திகில் என விறுவிறுப்பான சீரியல் முடிஞ்சிருச்சா?!... நடிகரின் உருக்கமான Post!!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi movie theatrical release date லாபம்

People looking for online information on LAABAM, Shruthi Haasan, SP Jananathan, Vijay Sethupathi will find this news story useful.