திருடாதே - தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டாவிலிருந்து வெளியான பாடல் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 27, 2019 08:19 PM
எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பில் தனுஷ் நடித்திருக்கும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.

இந்த படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இறுந்து மறுவார்த்தை பேசாதே, விசிறி, நான் பிழைப்பேனோ போன்ற பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்த படம் சில காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இந்த படம் வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து திருடாதே திருடாதே என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
திருடாதே - தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டாவிலிருந்து வெளியான பாடல் இதோ வீடியோ