தனுஷின் 'பட்டாஸ்' படத்தில் இருந்து அதிரடியாக வெளியான 'முரட்டுத்தமிழன் டா' வீடியோ சாங் ப்ரோமோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Jan 13, 2020 01:27 PM
தனுஷ் நடிக்கும் 'பட்டாஸ்' படத்தை 'எதிர் நீச்சல்' , 'கொடி' படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மெஹ்ரீன் பிர்ஸடா, சினேகா, நவீன் சந்திரா, நாசர், முனீஸ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்துக்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் கூட்டணி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ஏற்கனெவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வரும் 16ம் தெதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த ’பட்டாஸ்’ திரைப்படம் 15ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டது. பட்டாஸ் படத்துக்கு தணிக்கைக்குழு ’யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் ’முரட்டுத்தமிழன் டா’ பாடல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
தனுஷ் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடித்து வந்த டி40 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் தற்போது அவர் ‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தனுஷின் 'பட்டாஸ்' படத்தில் இருந்து அதிரடியாக வெளியான 'முரட்டுத்தமிழன் டா' வீடியோ சாங் ப்ரோமோ! வீடியோ