பிரபல மலையாள இசையமைப்பாளர் மறைந்த எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் மனைவி பத்மஜா ராதாகிருஷ்ணன் திடீர் உடல்நலக் குறைவினால் கேரளாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஜூன் 15) காலமானார்.
அவரது சொந்த ஊரான திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கடுமையான மூச்சுத் திணறல் இருப்பதாக கூறியிருக்கிறார். விரைவில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும், திங்கள்கிழமை அதிகாலை 1 மணியளவில், இதயக் கோளாறு காரணமாக இறந்தார். அவருக்கு 68 வயது.
பிரபலமான மலையாள படமான மிஸ்டர் பீன் படத்தில் பத்மாஜா பாடல்கள் எழுதியுள்ளார், இந்தப் படம் 2013-ம் ஆண்டு வெளியானது. இதில் ப்ரிதம் காக்னே மற்றும் பிஜு குட்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க சில பாடல்களையும் அவர் எழுதியுள்ளார். மட்டுமல்ல, பத்மஜா மல்லுவுட்டில் பிரபலமான நடிகை கூட. பத்மஜா தனது கணவர் எம் ஜி ஆர் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.ஜி.ராதாகிருஷ்ணனின் இசைப் பணிகளில் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி.டி.நீலகண்டன் நாயர் மற்றும் எம்.பி. அம்மு குட்டி அம்மா ஆகியோரின் மகள். பத்மஜா ராதகிருஷ்ணனுக்கு மகன் ராஜகிருஷ்ணன் மற்றும் மகள் கார்த்திகா ஆகியோர் உள்ளனர்.
அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.