மிஸ்ஸியம்மா முதல் தூங்காதே தம்பி தூங்காதே வரை.. பழம்பெரும் நடிகை ஜமுனா மரணம்.!
முகப்பு > சினிமா செய்திகள்பழம்பெரும் நடிகையான ஜமுனா இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.
Also Read | அஜித், சூர்யாவுக்கு குரல் கொடுத்தவரா.? பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் திடீர் மரணம்..
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹம்பி என்ற ஊரில் நிப்பானி சீனிவாச ராவ்- கவுசல்யா தேவி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ஜமுனா. அதன் பின்னர் இவருடைய குடும்பம் ஆந்திர மாநிலத்துக்கு குடிபெயர்ந்தது. தெலுங்கு சினிமாவில் புரட்சிகளை ஏற்படுத்தியவர் என கருதப்படும் காரிகாபட்டி ராஜாராவ், ஜமுனாவை படத்தில் நடிக்கும்படி அறிவுரை கூறியிருக்கிறார். அதன்பிறகு ’மா பூமி’ எனும் தன்னுடைய நாடகத்தில் நாயகியின் சகோதரி வேடத்தில் நடிக்கவைத்தார் ராஜாராவ்.
அப்போது அவருடைய கதாப்பாத்திரம் பெருமளவு பேசப்படவே ஜமுனாவை நாயகியாக வைத்து ‘புட்டிலு’ என்ற படத்தை எடுத்தார் ராஜாராவ். கடந்த 1953-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. அதற்கு பிறகு இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலும் இவர் நடிக்க துவங்கினார்.
குறிப்பாக தமிழில் ‘பணம் படுத்தும் பாடு’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் ஜமுனா. பிறகு இவர் நடித்த மிஸ்ஸியம்மா படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்லவேண்டும். இதனை தொடர்ந்து ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் கமல் ஹாசனுக்கு தாயாக ஜமுனா நடித்திருந்தார்.
100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஜமுனா 1989-ல் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடிப்பிலும் அரசியலிலும் பெருவாரியான மக்களை ஈர்த்த ஜமுனா இன்று காலை வயது மூப்பின் காரணமாக மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.
Also Read | ஜூடோ ரத்னம் மறைவு..."மறக்க முடியாத சரித்திரம்".. அஞ்சலி செலுத்தி ரஜினிகாந்த் உருக்கம்..!