www.garudabazaar.com

'வெந்து தணிந்தது காடு' படத்தின் அடுத்த அப்டேட்.. போட்டோவுடன் GVM கொடுத்த சர்ப்ரைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வெந்து தணிந்தது காடு' படத்தின் புதிய அப்டேட்டை கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

Venthu Thaninthathu Kaadu Movie New Update Regarding DI

Also Read | VIKRAM VEDHA: ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகானின் மாஸ் ஆக்சன் காட்சிகள்.. வெளியான சூப்பர் டிரெய்லர்!

'வெந்து தணிந்தது காடு’  படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் இசை & டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. 

Venthu Thaninthathu Kaadu Movie New Update Regarding DI

இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு கதாநாயகனாக 'முத்து' எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.  சிம்புக்கு ஜோடியாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை சித்தி இத்னானி நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Venthu Thaninthathu Kaadu Movie New Update Regarding DI

கௌதம் மேனனுடன் எழுத்தாளர் ஜெயமோகன் இந்த படத்திற்காக முதல் முறையாக இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே நான் கடவுள், அங்காடி தெரு, 2.O, பாபநாசம், சர்கார், இந்தியன்-2, பொன்னியன் செல்வன், விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.

கவிஞர் தாமரை பாடலாசிரியராக பணிபுரிகிறார். கலை இயக்குனராக ராஜிவ் நாயரும், உடை வடிவமைப்பாளராக கௌதம் மேனனின் தங்கை உத்தாரா மேனனும் பணிபுரிகின்றனர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார்.

Venthu Thaninthathu Kaadu Movie New Update Regarding DI

படத்தின் ரிலீஸை ஒட்டி படத்தின் டிஐ & கலர் கிரேடிங் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து என கௌதம் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஒளிப்பதிவு இயக்குனர் சித்தார்த்தா மற்றும் கலரிஸ்ட் பாலாஜியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இந்த தகவலை கௌதம் மேனன் உறுதி செய்துள்ளார்.

 

Also Read | சிரஞ்சீவி நடிக்கும் லூசிபர் தெலுங்கு ரீமேக்.. நயன்தாராவின் தோரணையான மாஸ் போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Venthu Thaninthathu Kaadu Movie New Update Regarding DI

People looking for online information on Silambarasan TR, Venthu Thaninthathu Kaadu Movie updates will find this news story useful.