வெங்கட்பிரபு இயக்குனர் ஆக இவங்க தான் காரணமாம்.. நெகிழ்ச்சியான அறிக்கை விட்ட VP! பின்னணி தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்சென்னை: இயக்குனர் வெங்கட்பிரபு ஒரு நன்றி கூறும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Also Read | அதிர்ச்சியில் திரையுலகம்! ரெட், வேட்டைக்காரன், சின்ன கவுண்டர் பட நடிகர் திடீர் மரணம்..
இயக்குனர் வெங்கட்பிரபு தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர். தமிழ் சினிமாவிற்கு பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவற்றில் 'சென்னை - 28', 'சரோஜா', 'மங்காத்தா' படங்கள் முக்கியமானவை. சென்னை - 600028 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. அதன் பின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ், சென்னை -28 பார்ட் 2, மாநாடு, மன்மத லீலை ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.
இயக்குனராகி 15 வருடங்கள் நிறைவை ஒட்டி ஒரு அறிக்கையை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதில், "இந்த நாள் ஓர் இனிய நாளாக இருப்பதற்குக் காரணம் எஸ்.பி.பி சாரின் ஆசீர்வாதமும் என் நண்பன் சரணின் நம்பிக்கையும்தான். 15 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் அவர்கள் 'சென்னை 600028’ மூலம் என் திரைப் பயணத்தைத் தொடங்கிவைத்தார்கள். அதனால்தான் வெங்கட் பிரபு என்கிற நானும் சினிமா எனும் பெருங்கடலில் இன்று பதினைந்தாம் ஆண்டை நிறைவு செய்கிறேன்.
நான் சினிமாவிடம்தான் சினிமாவைக் கற்றுக்கொண்டேன். பிரபலமான இயக்குனர்களிடம் இருந்து சினிமாவைக் கற்றுக்கொள்ளும் சூழல் எனக்கு அமையவில்லை. ஆனாலும், புதுப்புது முயற்சிகள் செய்வதில் எனக்கிருக்கும் ஆர்வம் ஒருபோதும் குறைவதில்லை. அந்த முயற்சிகளில் சில படங்கள் வெற்றி பெற்றன; சில படங்கள் எனக்கு நல்ல அனுபவமாக அமைந்தன.
எது எப்படி இருந்தாலும், நான்கைந்து வருடங்கள் இடைவெளி இருந்தாலும்கூட, வெங்கட்பிரபு என்கிற ஒரு மனிதனை ஒருபோதும் மறந்துவிடாமல், நான் ஒரு படத்தோடு வரும்போதெல்லாம் ரசிகர்களாகிய நீங்கள் மனதார வரவேற்கிறீர்கள். உங்கள் அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
என் அம்மாவின் முதலாம் ஆண்டு நினைவு நாளை எதிர்நோக்கும் இந்த வேளையில் என் சினிமா பயணத்தை அவருக்கு காணிக்கையாக்குகிறேன்.
என்னோடு என்றும் துணை நிற்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நட்சத்திரங்கள், நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி!" என வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
வெங்கட்பிரபு இயக்குனர் ஆக இவங்க தான் காரணமாம்.. நெகிழ்ச்சியான அறிக்கை விட்ட VP! பின்னணி தகவல் வீடியோ
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Premji Amaren About His Brother Director Venkat Prabhu
- Director Venkat Prabhu Gets Ajith Valimai Movie FDFS Tickets
- DecadeOf Kollywood Pride MANKATHA Director Venkat Prabhu
- Director Venkat Prabhu Black Ticket Cinema OTT
- Wow! A Sequel For Thala Ajith's 'Mankatha'? - Director Venkat Prabhu's Tweet Goes VIRAL - Check Out
- Director Venkat Prabhu Production Movie Releasing Direct Ott
- Director Venkat Prabhu Shares STR’s Unseen Side From Maanaadu Shooting Spot; Viral Pics
- மாநாடு பற்றி வெங்கட் பிரபு கருத்து | Director Venkat Prabhu Clarification On Silambarasan Maanaadu Teaser
- STR's Maanaadu Director Venkat Prabhu Clarifies About Latest Teaser Controversy
- Director Venkat Prabhu And Bharathiraja Rush To Hospital For SP Balasubrahmanyam | எஸ்பி பாலசுப்ரமணியத்தை காண பாரதிராஜா, வெங்கட் பிரபு மருத்துவமன
- Maanaadu Director Venkat Prabhu Shares Brothers Day Tiktok Video With Premgi Goes Viral | பிரேம்ஜியுடன் வெங்கட் பிரபு பகிர்ந்த டிக் டாக் வீடியோ வைரல
- STR's Maanaadu Director Venkat Prabhu Tweets About Wine Shops Reopening During Lockdown | ஒயின் ஷாப் திறப்பது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கமெண