இயக்குநர் வெங்கட் பிரபு சிம்புவை வைத்து 'மாநாடு' படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.
![Director Venkat Prabhu reply to his fan about Thala Ajith Film Director Venkat Prabhu reply to his fan about Thala Ajith Film](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/director-venkat-prabhu-reply-to-his-fan-about-thala-ajith-film-photos-pictures-stills.jpg)
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி 'மாநாடு' திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் வரும் ஜூன்.25ம் தேதி தொடங்கி ஜூலை.12ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக வரும் ஜூன்.22ம் தேதியே இயக்குநர்கள் குழு மலேசியா செல்ல திட்டமிட்டுள்ளனர். ‘மாநாடு’ ஷூட்டிங்கிற்காக நடிகர் சிம்பு மற்றும் கல்யாணி பிரியதர்ஷினி வரும் ஜூன்.24ம் தேதி மலேசியா செல்லவுள்ளதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் சுமார் 6000 பேர் பங்கேற்கும் மாநாடு காட்சி மிகப்பெரிய அளவில் படமாக்கப்படவுள்ளது. இதற்காக கொடிசியா மைதானத்தை ஜூலை இறுதி வாரத்தில் புக் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபு திரும்ப அஜித்தை வைத்து படம் எடுததால் அது நிச்சயம் ஃபிளாப் ஆகும் ஏனா அவர் கிட்ட ஒழுங்கான ஸ்டோரி இல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.
Vechikita vanjana pandrey bro!! Enniki enkita kadhai irrundhurukku ;))) https://t.co/S8SRc0zO0b
— venkat prabhu (@vp_offl) June 12, 2019
அதற்கு நக்கலாக பதிலளித்த வெங்கட் பிரபு , வச்சிக்கிட்டா வஞ்சகம் பன்றேன் புரோ என்னிக்கி என்கிட்ட கதை இருந்துருக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.