www.garudabazaar.com

ரங்கன் வாத்தியார் & கபிலனுக்கு.. போட்டியாக களமிறங்கிய டான்சிங் ரோஸ்.. வேம்புலி.. Trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

vembuli dancing rose viral kabilan rangan vathiyar memes

அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படத்தில், நடிகர் ஆர்யா, ‘சார்பட்டா பரம்பரைக்காக’ குத்துச்சண்டை போட்டியில் ஈடுபடுவார். எழுபதுகளில் மெட்ராஸ் மாகாணத்தின் குத்துசண்டை மரபை மையமாக வைத்து நடக்கும் இந்த கதையில், ‘சார்பட்டா பரம்பரை’யின் கடைசி வாத்தியாராக வரும்  ரங்கன் எனும் கேரக்டரில் பசுபதி நடித்திருப்பார்.

vembuli dancing rose viral kabilan rangan vathiyar memes

ரங்கன் வாத்தியாரை தமது இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு குத்துச்சண்டை போட்டியில் ஆர்வம் காட்டுவார் கபிலன் எனும் கேரக்டராக வரும் ஹீரோ ஆர்யா. இந்த நிலையில் ரங்கன் வாத்தியாரை கபிலன் சைக்கிளில் அழைத்துச் செல்லும் அந்த குறிப்பிட்ட காட்சியை கொண்டு பலவிதமான மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.

vembuli dancing rose viral kabilan rangan vathiyar memes

அதன்படி கபிலன், ரங்கன் வாத்தியாரை சைக்கிளில் அழைத்துச் செல்லும் இந்த மீம்ஸ்கள் இரண்டு மூன்று நாட்களாகவே, எல்லா விஷயங்களுடனும் தொடர்புபடுத்தி ட்ரெண்ட் ஆகி வருகின்றன. 

vembuli dancing rose viral kabilan rangan vathiyar memes

இப்படி, சார்பட்டா பரம்பரை வாத்தியார் ரங்கனை, அவருடைய சீடர் கபிலன் சைக்கிளில் ரெய்டு அழைத்துச்செல்வதற்கு போட்டியாக, களத்தில் குதித்துள்ளனர் பிரபல இடியப்ப பரம்பரையின் வீரர்களான வேம்புலியும் டான்சிங் ரோஸூம். ஆம், இதே படத்தில் வேம்புலியை எதிர் கொள்வதற்கு முன்பாக டான்சிங் ரோஸ் எனும் கேரக்டரை ஆர்யா எதிர்கொள்வார். இதில் டான்சிங் ரோஸ் மற்றும் வேம்புலி ஆகியோருக்கு துரைக்கண்ணு வாத்தியாராக இருப்பார்.

vembuli dancing rose viral kabilan rangan vathiyar memes

இந்த நிலையில்தான் டான்சிங் ரோஸ் மற்றும் வேம்புலி கேரக்டர்களில் நடித்த நடிகர்கள் முறையே ஷபீர் கல்லரக்கல் மற்றும் ஜான் கொக்கைன் இருவரும் தங்கள் இடியப்ப பரம்பரையின் வாத்தியாரான துரைக்கண்ணு வேடத்தில் நடித்திருந்த ஜிஎம் சுந்தரை சைக்கிளில் அழைத்துச் செல்லும் புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Also Read: விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!! .."அந்த Marriage காட்சி Shooting-க்கு வரும்போது".. தங்கை நெகிழ்ச்சி பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

vembuli dancing rose viral kabilan rangan vathiyar memes

People looking for online information on Arya, John Kokken, Pa Ranjith, Sarpatta Parambarai, Shabeer Kallarakkal will find this news story useful.