www.garudabazaar.com

ஆர்யன் & ஷபானா: “வீட்ல எப்படி சொன்னீங்க?”.. “Marriage எப்போ?”.. நேரலையில் போட்டு உடைத்த உண்மைகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை ஷபானாவுக்கும், பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யனுக்குமான காதல் விவகாரம் ரசிகர்கள் மத்தியில் உறுதியாகியுள்ளதை அடுத்து, இவர்களின் திருமணம் எப்போது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இருவரும் நேரலையில் பதில்களை அளித்துள்ளனர்.

aryan shabana opens up marriage live chat audio viral

முன்னதாக நடிகர் ஆர்யன் தமது இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணின் கையுடன் ஒரு ஆணின் கைகோர்த்தபடியான புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதை பார்த்த பலரும் கண்டிப்பாக இது ஷபானா மற்றும் ஆர்யனின் கைகள் தான் என்று சொன்னதுடன், இவர்களின் கைகளில் ஒரே மாதிரி இருந்த மோதிரத்தை பார்த்து அது நிச்சயதார்த்த மோதிரம் தான் என்றும் உறுதியாகக் கூறினர்.

இந்நிலையில் தான் ஆர்யன் மற்றும் ஷபானா நேரலையில் பேசியுள்ளனர். அதில்,  “எப்போ நம்முடைய செல்ஃபி போட்டோவை போடுவோம் என நிறைய பேர் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள் ஷபானா..” என ஆர்யன் கேட்க, அதற்கு, “கண்டிப்பாக ஒருநாள் போடுவோம்.. ஒரு ஸ்பெஷலான நாளில் நம்முடைய செஃல்பி போட்டோவை பகிரலாம்” என்று ஷபானா குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல்,  “லவ் ஸ்டோரியை கேட்டால் சொல்ல மாட்டீங்குறீங்களே என்று ரசிகர்கள் கேட்கிறார்கள் ஷபானா” என ஆர்யன் அதில் குறிப்பிடுகிறார். மேலும் பேசிய ஆர்யன், நேரலையில் இணைந்துள்ள தன் நண்பர் ஒருவர் திருமண தேதி, இன்விடேஷன் எல்லாவற்றையும் குறித்து கேட்பதாக ஷபானாவிடம் தெரிவிக்கிறார்.

அதற்கு பதிலளித்த ஷபானா, “தெரியல கண்டிப்பா அப்டேட் பண்ணுவோம்...தேதி முடிவு செய்யப்பட்டதும்.. நாங்கள் சொல்லிவிடுவோம்!” என கூறுகிறார்.  அத்துடன், “வீட்ல எப்படி இந்த விஷயத்தை சொன்னிங்க” என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “ஒரு flow-ல சொல்லிட்டோம்” என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார்.

ஆர்யன்  மற்றும் ஷபானா பேசும் முழு நேரலை ஆடியோ சாட் இணைப்பில் உள்ளது.

ஆர்யன் & ஷபானா: “வீட்ல எப்படி சொன்னீங்க?”.. “MARRIAGE எப்போ?”.. நேரலையில் போட்டு உடைத்த உண்மைகள்! வீடியோ

aryan shabana opens up marriage live chat audio viral

People looking for online information on Aryan, Shabana Shahjahan will find this news story useful.