777 Charlie Trailer

பிரபல TV சீரியலில் சத்யராஜ், R.J.பாலாஜி, ஊர்வசி சிறப்பு Entry.. வெளியான Exciting தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

R J பாலாஜி இயக்கி நடிக்கும் வீட்ல விசேஷம் திரைப்படம் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸாகிறது.

Veetla vishesham crew in Zee Tamil puthu puthu arthangal serial

வீட்ல விசேஷம்…

நடிகர் ஆர் ஜே பாலாஜி, போனி கபூரின் பே வியூவ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள வீட்ல விஷேசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவரோடு அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் மலையாள நடிகை லலிதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தியில் வெளியான பதாய் ஹோ படத்தின் ரீமேக் ஆகும். தேசியவிருதையும் இந்தப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை இயக்கியும் உள்ளார் பாலாஜி. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ஐபிஎல் போட்டிகளின் நடுவே நடைபெற்று கவனத்தைப் பெற்றது. இதையடுத்து படம் ஜூன் 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

சீரியலில் படக்குழு…

வெள்ளித்திரை பிரபலங்கள் சின்னத்திரை பக்கமே வராமல் இருந்து வந்த காலங்கள் மாறி பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைவரும் தொலைக்காட்சி சேனல்களின் பவரை புரிந்து கொண்டு தங்களின் படங்களை ப்ரமோஷன் செய்து வருகின்றனர்.  பொதுவாக ஒரு படத்தை ப்ரமோஷன் செய்ய படக்குழுவினர் பேட்டி கொடுப்பது, ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பது போன்ற விஷயங்களை தான் பல வருடங்களாக பின்பற்றி வருகின்றனர்.

Veetla vishesham crew acted in Zee Tamil serial

இந்த நிலையில் வரும் ஜூன் 17-ம் தேதி வெளியாக உள்ள வீட்ல விஷேசம் படத்திற்காக ஜீ தமிழ்  இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத புது முயற்சியை முன்னெடுக்க உள்ளது. பொதுவாக சீரியல்களுக்கு எப்போதும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உண்டு. லட்சக்கணக்கான மக்கள் தினம்தோறும் தவறாமல் சீரியல்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்படியான சீரியல்கள் மூலமாக ஒரு படத்தை ப்ரமோஷன் செய்தால் அது நிச்சயம் பல லட்சம் குடும்பங்களுக்கு சென்று சேரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

புதுப்புது அர்த்தங்கள்…

இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் இதுவரை யாரும் செய்யாத இந்த புது யுக்தியை கையில் எடுத்து படக்குழுவினரிடம் இது குறித்து விவாதிக்க அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தேவயானி, பார்வதி, நியாஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வீட்ல விஷேசம் படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆர் ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Veetla vishesham crew acted in Zee Tamil serial

ஏற்கனவே 350-க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்துள்ள இந்த சீரியலின் கதையில் எந்த குழப்பமும் வராமலும் சீரியல் விறுவிறுப்பை மேலும் கூட்டும் வகையிலும் படக்குழுவினர் இந்த சீரியலில் இணைந்து நடித்துள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியின் இந்த புது முயற்சி இனி வரும் காலங்களில் மிகப்பெரிய ட்ரெண்ட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இப்படியொரு முயற்சியின் முழு பெருமையும் ஜீ தமிழ் தொலைக்காட்சியை சேர்ந்ததாகவே இருக்கும் என சொல்லலாம்.

தொடர்புடைய இணைப்புகள்

Veetla vishesham crew in Zee Tamil puthu puthu arthangal serial

People looking for online information on R J Balaji, Sathyaraj, Urvashi, Veetla Vishesham, Zee Tamil will find this news story useful.