VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

'வாரிசு' படத்துல மொத்தம் எத்தனை பாட்டு? இசையமைப்பாளர் தமன் கொடுத்த EXCLUSIVE அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாரிசு' படத்தின் பாடல்கள் குறித்த Exclusive தகவல் வெளியாகி உள்ளது.

Varisu Movie Music Songs Exclusive update from S Thaman

Also Read | சிபிராஜ் நடிப்பில் பிரபல OTT-யில் நேரடியாக வெளியாகும் 'வட்டம்'.. வெளியான சூப்பர் டிரெய்லர்!

விஜய்யின் நடிப்பில் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தில் ராஜுவின் தயாரிப்பில் வாரசுடு/வாரிசு படம் உருவாகி வருகிறது. 'வாரிசு' படத்தை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தில் ராஜு & ஷிரிஷ் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர்.

Varisu Movie Music Songs Exclusive update from S Thaman

இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர், கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஸ்ரீ ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்ரீ ஹன்ஷிதா ஆகியோர் இப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள். சுனில் பாபு & வைஷ்ணவி ரெட்டி தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் ஆக பணிபுரிகின்றனர்.

இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு 3 போஸ்டர்கள் வெளியாகின.

வாரிசு படத்தின் 4-ம் கட்ட படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் , கடந்த 04.07.2022 அன்று முதல் துவங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இன்று (ஜூலை 25) வரை இந்த படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நடக்கும் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Varisu Movie Music Songs Exclusive update from S Thaman

வாரிசு படத்திற்கு நடன இயக்குனர்களாக ஷோபி & ராஜூ சுந்தரம் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான தகவலை இசையமைப்பாளர் தமன் பகிர்ந்துள்ளார். அதில், வாரிசு படத்தில் 6 பாடல் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்கள் தியேட்டரில் நடனம் ஆடும் பாடல்களும் படத்தில் உண்டு என கூறியுள்ளார்.

Also Read | வேட்டி சட்டையில் இயக்குனர் H. வினோத்.. இணையத்தை கலக்கும் 'AK61' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

'வாரிசு' படத்துல மொத்தம் எத்தனை பாட்டு? இசையமைப்பாளர் தமன் கொடுத்த EXCLUSIVE அப்டேட்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Movie Music Songs Exclusive update from S Thaman

People looking for online information on S Thaman, Varisu Movie, Varisu Movie Music Songs, Vijay will find this news story useful.