போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடிக்கும் ’டேனி’ - டீசர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 06, 2019 12:25 PM
விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவர் சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கும் ’டேனி’ என்ற படம் மூலம் வரலட்சுமி ஹீரோக்களுக்கு நிகரான ஒரு போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் ஒரு நாயும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.
க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள இப்படத்தில் வரலட்சுமி சண்டைக்காட்சிகளிலும் நடித்துள்ளார். பி.அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ‘இனிமே இப்படித்தான்’, ’தும்பா’ படத்துக்கு இசையமைத்த சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி நடிக்கும் ’டேனி’ - டீசர் இதோ வீடியோ